தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நிற்கும்; மத்திய அமைச்சர் உறுதி

சென்னை – மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமென ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கூறியுள்ளார்.

தேஜஸ் அதிவிரைவு ரயில் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவங்கப்பட்டது.  இந்த ரயில் திருச்சி மற்றும் திண்டுக்கல் ரயில் நிலையங்களில் மட்டுமே   நின்று  செல்லும்.  

இந்த ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் இந்த கோரிக்கையை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம்  நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்கடேசன் நேரில் வழங்கினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை-மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்ல தெற்கு ரயில்வே பரிந்துரைத்த நிலையில் ரயில்வே போர்டு இன்னும் அனுமதி கொடுக்காமல் உள்ளது. இதனை மத்திய அமைச்சர் தலையிட்டு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளதாக கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top