உடற்பயிற்சியில் ஈடுபட்டால் இளைஞர்களை வாழ்க்கை பயணம் நல்வழியில் அமையும் : உலக ஆணழகன் பட்டம் வென்ற ராஜேந்திரன் மணி 

கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவர் ராஜேந்தின் மணி(50), தனது தந்தை குத்துச்சண்டை வீரராக இருந்த நிலையில் தானும் 14 வயது முதல் உடற்பயிற்சி மேற்கொண்ட நிலையில் உடலை கட்டுகோப்பாக்க பாடி பில்டர் போட்டிகளில் பங்கேற்றார்.

அதே வேளையில் விமானப்படையில் கடை நிலை ஊழியராக பணியாற்றிவரும் போது அவர்களுக்காக பல்வேறு பாடி பில்டர் போட்டிகளில் பங்கேற்றார்.

அதனை தொடந்து பிரிசிலா ஜெயந்தி என்பவரை திருமணம் செய்த பின்னர் அவர்களுக்கு பெஞ்சமின் ஜெரால்ட், ராபின்சன் ஆகிய இரண்டு மகன்கள் பிறந்தனர்.

 ஆனாலும் பாடி பில்டர் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றார் ராஜேந்திரன் மணி, 

போதிய வருமானம் இல்லை என்றாலும் அவர் மனைவி பிரிசிலா ஜெயந்தி கொடுத்த ஊக்கத்தாலும், உதவியாலும் தேசிய அளவில் 14 முறை இந்திய ஆணழகன் பட்டமும், ஆசிய அளவில் 3 முறை ஆணழகன் பட்டமும் வெற்றார். மேலும் உலக அளவில் 2013ம் ஆண்டு முதல் முறையாக ஆணழகன் பட்டம் வென்றார் ராஜேந்திரன் மணி.

தற்போது 50 வயதை நெருங்கும் நிலையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் 44 நாடுகளில் இருந்து பங்கேற்ற வீரர்களுடன் ஹெவி வெயிட் பிரிவில் பல சுற்றுகள் போட்டியிட்டு, வெற்றி பெற்று இந்திய நாட்டுக்கு பெருமையை தேடி தந்தார்.  

 சென்னை வந்தடைந்த ராஜேந்திரன் மணி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரை நேரில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.

அதனையடுத்து தனது வீட்டிற்கு வந்த ராஜேந்திரன் மணியை அவர் மனைவி பிரிசிலா ஜெயந்தி மற்றும் பாடிபில்டராக உள்ள மகன் பெஞ்சமின் ஜெரால்ட், கல்லூரியில் படிக்கும் இளைய மகன் ராபின்சன் மற்றும் உறவினர்கள் ஆகியோர் வரவேற்று மாலையிட்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்திந்த ராஜேந்திரன் மணி:- இளைஞர்கள் விளையாட்டு, உடற்பயிற்சி முக்கியதுவம் அளித்து உடல் நலத்தை காத்திட வேண்டும் அப்படி விளையாடுபவர்களும், உடற்பயிற்சி மேற்கொள்பவர்களும் ஒழுக்கமான வாழ்வு அமையும்.

50 வயதில் உலக ஆணழகன் போட்டியில் நான் வெற்றி பெற்றேன் என்றால் ஒவ்வொரு இளைஞர்காலும் வெற்றி பெற முடியும்.

அதற்கான உணவு முறை, முறையான பயிற்சி மேற்கொள்ள வேண்டும், குறைந்தது உடல் நலனை பாதுகாக்க நாள் தோரும் ஒருமணி நேரமாவது அனைவரும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

தற்போது தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்துள்ளேன், முதல்வர் தமிழக அரசு உதவி செய்யும் என தெரிவித்தார், பாடி பில்டர் துறையை அங்கீகாரம் செய்திட கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top