சேலையூர் எம் ஜி ஆர் முத்துமாரியம்மன் ஆலயத்தில் 1 ஆகஸ்ட் அன்று மஹாகும்பாபிஷேகம்

சேலையூர் எம் ஜி ஆர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேகம் மற்றும் ஆடி மாத சிறப்பு உற்சவ பூஜை 1 ஆகஸ்ட் அன்று நடைபெறும்.

31 ஜூலை அன்று காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், குரு மண்டலா ஹோமம், கோமாதா பூஜை, சுவாசினி, பாலா கண்ணிய பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு முதலாம் கால ஹோமங்கள் மஹா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெறும்.

1 ஆகஸ்ட் காலை 6 மணிக்கு மகா பூர்ணாஹுதி மற்றும் மகா கும்பாபிஷேகம் வைபவமும் நடைபெறும். மேலும் மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.

மேலும் 5,6 மற்றும் 7 ஆகஸ்ட் ஆகிய தேதிகளில் பதி அலங்கரித்த பதிவிளக்கு ஏற்றுதல், அம்மன் பூங்கிரகம் வீதி உலா மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top