Health Walk to be launched at Agaramthen Main Road on 4 November

அகரம் தென் சாலையில் நவம்பர் 4 மாபெரும் நடைப்பயிற்சி திட்ட துவக்க விழா

தாம்பரம் மாநகராட்சி – பொது சுகாதார பிரிவு – மண்டலம்5- சேலையூர்- அகரம் தென் மெயின்ரோடு (8 கி.மீ) “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற நலவாழ்வு பேணுவதற்கான நடைப்பயிற்சி (Health Walk)” ஆலோசனை கூட்டம் MJL Party Hall-இல் நடைபெற்றது.

மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பரணீதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வன், மாநகராட்சி சுகாதார அலுவலர் சாமுவேல், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், நாகராஜன், நகர நல அலுவலர் அருளானந்தம், மாமன்ற உறுப்பினர் வாணி சுரேஷ்பாபு, குடியிருப்போர் நலச்சங்கங்களின் சார்பாக ஐ.ஓ.பி. காலனி க.மீனாட்சி சுந்தரம், ரெங்கராஜன், சான்றா, வணிகர்கள் சங்க பிரதிநிதிகள், சமூக சேவை அமைப்பு நிர்வாகிகள், மாநகராட்சி சுகாதார துறை ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

MJL Swimming pool முதல் மப்பேடு சந்திப்பு வரை இருபுறமும் (Service Road area) நடைப்பயிற்சி செய்வோருக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கவும், நிழல் தரும் மரங்கள் நடவும், அதனை அருகிலுள்ள வணிக நிறுவனங்கள் பராமரிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்திலே முதல் நிகழ்ச்சியாக வருகிற நவம்பர் 4-ஆம் தேதி காலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபெறும் வகையில் மிகப் பிரமாண்டமாக இப்பகுதி நடைப்பயிற்சி திட்ட துவக்க விழாவை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை ஆணையாளர், சுகாதார துறை இயக்குநர், மாநகராட்சி மேயர், ஆணையர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top