எஸ்ஆர்எம் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி முன்னாள் மாணவி அனுஸ்ரீ உலக அளவில் வெண்கல பதக்கம் வென்றார்

சுவிட்ஸர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான திறன் மேம்பாடு போட்டியில் எஸ்ஆர்எம் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி முன்னாள் மாணவி அனுஸ்ரீ வெண்கல பதக்கம் வென்றார்.

திறன் மேம்பாடு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவி அனுஸ்ரீயை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டி ₹ 1லட்சம் பரிசு வழங்கினார்.

அதேபோன்று அண்மையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவி அனுஸ்ரீக்கு ₹ 2 லட்சம் பரிசு வழங்கி பாராட்டினார்.

சுவிட்ஸர்லாந்து நாட்டில் அண்மையில் ஹோட்டல் மேலாண்மையில் திறன் மேம்பாட்டு போட்டி நடைபெற்றது.

இதில் அனுஸ்ரீ ஹோட்டல் மேலாண்மையில் வரவேற்பு பிரிவில் திறன் மேம்பாட்டு போட்டியில் பங்கேற்று 3ம் இடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.

எஸ்ஆர்எம் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி முன்னாள் மாணவி அனுஸ்ரீ சென்னையை சேர்ந்தவர். ஏற்கனவே மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும், தேசிய அளவிலும் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று உலக அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரின் ரொக்க பரிசு மற்றும் பாராட்டு பெற்ற மாணவி அனுஸ்ரீயை எஸ்ஆர்எம் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி நிர்வாகம் பாராட்டியது.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top