கடப்பேரி கிளை நூலகத்தில்கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் கடப்பேரி கிளை நூலகத்தில் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு நாள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆய்வாளர் த இளங்கோ அவர்கள் தலைமை ஏற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தின் மாநில அமைப்பு செயலாளர் சி கணேசன் முன்னிலையில் வாசகர் வட்டத்தலைவர் எஸ் மனோகரன் வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் கணபதி, செல்வராஜ், பாஸ்கரன், ராமசுப்பிரமணியன், எழில்வானன், சுப்பையா, தனசேகர், தேவேந்திரன், திருவேங்கடம், சோனியா, கௌரி மனோகரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அனைவருக்கும் நூலகர் சுந்தரமூர்த்தி நன்றி தெரிவித்தார்.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top