சுற்றுச்சூழலை காக்க பொது மக்களுக்கு தாம்பரம் மாநகராட்சி கோரிக்கை

உலக சுற்றுச்சூழல் தினம் 5.6.2023 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தாம்பரம் மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பொதுமக்களின் இல்லங்களில் சேகரித்து வைத்துள்ள தேவையற்ற துணிகள், காலணிகள், பொம்மைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை உபயோகத்தை குறைத்தல் மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துதல், மறுசுழற்சி செய்தல் (Reduce, Reuse, Recycle) என்ற நிகழ்வின் மூலம் சேகரிக்கும்பொருட்டு, மாநகராட்சியின் பரப்புரையாளர்களால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 70 வார்டுகளிலும் உபயோகத்தை குறைத்தல் மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துதல், மறுசுழற்சி செய்தல் (Reduce, Reuse, Recycle) நடவடிக்கைக்கான மையம் 05.06.2023 அன்று வரை இயங்கப்பட உள்ளது.

மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தும் வகையில் செயல்படுகின்ற இந்த மையத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களான துணிகள், காலணிகள், பொம்மைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை காலை 7:00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை வழங்கலாம்.

எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தேவையற்ற பொருட்களை வழங்கி, சுற்றுச்சூழலை பாதுகாக்க மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top