Conservancy workers from Sembakkam appreciated for returning diamond earring

குப்பையுடன் வீசப்பட்ட வைரத்தோடை மீட்டு ஒப்படைத்த துப்புரவு தொழிலாளர்களை பாராட்டிய அதிகாரிகள்

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் மண்டலம் ராஜகீழ்பாக்கம் ராதே ஷியாம் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஜானகி வயது 65 இவர் இன்று காலை தனது வீட்டை சுத்தப்படுத்தி விட்டு குப்பைகளை அள்ளி தனியாக வைத்துள்ளார்.

பின் காலையில் தாம்பரம் மாநகராட்சி குப்பைகளை அள்ளும் வாகனம் தனது வீட்டின் அருகே வந்தவுடன் வீட்டில் இருந்த குப்பைகளை அள்ளி குப்பை வண்டியில் போட்டுள்ளார்.

பின்பு வீட்டிற்கு வந்த போது தனது காதில் மாட்டியிருந்த 50 ஆயிரம் மதிப்பில் உள்ள வைர கம்மல் கானாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டில் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார்.

வீட்டில் கிடைக்காததால் தான் அஜாகர்த்தியாக கீழே விழுந்த வைர கம்மலை குப்பைகளுடன் சேர்த்து குப்பை வாகனத்தில் வீசி இருக்கலாம் என கருதி உடனடியாக அப்பகுதியில் சென்ற குப்பை அள்ளும் வாகனத்தை கண்டுபிடித்து அதன் மேற்பார்வையாளர் கார்மேகம் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக கார்மேகம் வாகனத்தில் இருந்த குப்பைகளை ஒரு மணி நேரமாக அகற்றி பார்த்த போது வைர கம்மல் குப்பைகளுடன் இருப்பதை கண்டுபிடுத்தனர்.

இதனை அறிந்து வந்த சுகாதார ஆய்வாளர் சிவகுமார் மேலாளர் கார்மேகம் மற்றும் பணியாளர்கள் இணைந்து குப்பையில் கண்டெடுக்கப்பட்ட வைர கம்மலை மூதாட்டி ஜானகியிடம் ஒப்படைத்தனர்.

இதனை பெற்று கொண்டு மூதாட்டி கைக்கூப்பி தனது நன்றியை தெரிவித்தார்.

பின்பு நேர்மையாக செயல்பட்ட கார்மேகத்திற்க்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top