தாம்பரம் மாநகராட்சி 63வது வார்டில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்

தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட 5வது மண்டலத்தில் உள்ள 63 வது வார்டில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டும் பார்வர்ட் மகளிர் நிறுவனம் மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் உழைக்கும் மகளிர் அனைவருக்கும் பாராட்டு மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர் ராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி நிகழ்ச்சி ஏற்பாடு 63வது மாமன்ற உறுப்பினர் பி ஜோதிகுமார் ஏற்பாட்டில் சிறப்பு அழைப்பாளராக 5வது மண்டல குழு தலைவர் எஸ் இந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் மகளிர் குழு மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

உடன் தி மு க வார்டு செயலாளர்.வ.லோகநாதன் பகுதி துணை செயலாளர் கி வேலுமணி. முன்னாள் நகர மன்ற உறுப்பினர். கலைச்செல்வி ஜோதிகுமார். பார்வர்ட் மகளிர் குழு இயக்குநர் டாக்டர்.எம். சியாமளாபேபி. மற்றும் திமுக நிர்வாகிகளும் பொதுமக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top