சேலையூர் அவ்வை நகர் முருகன் ஆலயத்தில் ஒன்பதாம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழா

கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்கினால் வாழ்வில் நன்மைகள் கைகூடும் என்பது நம்பிக்கை. பொதுவாக ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

நம் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும், எல்லாம் நொடியில் நீங்கி, எதிரிகள் ஒழிந்து முன்னேற்றம் உண்டாக, தன்னம்பிக்கை அதிகரிக்க சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்க வேண்டும்.

சேலையூர் அவ்வை நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளிதேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் 9 ஆம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழா 25 அக்டோபர் தொடங்கி 31 அக்டோபர் வரை நடைபெறும்.

இதில் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும், ஆறாம் நாளான 30 அக்டோபர் அன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் அடுத்த நாள்,  31 அக்டோபர் அன்று மாலை திருக்கல்யாணம் நடைபெறும்.

பக்தர்கள் இவ்வழாவில் கலந்து கொண்டு இறைவனின் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள். ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பக்தர்கள் தங்களால் இயன்ற நன்கொடை அளித்து விழாவை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள்
Name: Avvai Nagar Murugan Temple
Account Number: 3958000100117937
IFSC: PUNB0395800
என்கிற வங்கி கணக்கில் செலுத்தலாம்.
தொடர்புக்கு: 9789930246.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top