SRM Public School Celebrates International Yoga Day

எஸ்ஆர்எம் பப்ளிக் ஸ்கூல் கூடுவாஞ்சேரியில் சர்வதேசம் யோகா தினம்

சர்வதேசம் யோகா தினம் முன்னிட்டு நந்திவரம் கூடுவாஞ்சேரி எஸ்ஆர்எம் பப்ளிக் ஸ்கூலில் இன்று நடைபெற்ற யோகா தினம் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர் 650 பேர் பங்கேற்று யோகா செய்து காட்டினர். தேசிய யோகாசனம் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு இணைச்செயலாளர் முனைவர் ஜெயந்தி பங்கேற்று யோகா பற்றி சிறப்புரையாற்றினார்.

சர்வதேசம் யோகா தினம் முன்னிட்டு உலகம் முழுவதும் இன்று யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. யோகா தினம் முன்னிட்டு சென்னை அடுத்த நந்திவரம் கூடுவாஞ்சேரியில் இயங்கிவரும் எஸ்ஆர்எம் பப்ளிக் ஸ்கூலில் (SRM Public School) யோகா தினம் நடைபெற்றது. 3 மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர் 650 பேரும் பங்கேற்று யோகா செய்தனர்.

நிகழ்ச்சியில் தேசிய யோகாசனம் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு இணைச்செயலாளர் முனைவர் ஜெயந்தி கௌரவ விருந்தினராக பங்கேற்று யோகா செய்வதின் மூலம் உடல் ஆரோக்கியம் அடைவதுடன், நினைவு ஆற்றல் அதிகரிக்கும் என்று கூறி யோகாசனம், பிரணாயம் உள்ளிட்டவை செய்து காட்டினார்.

யோகா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் ஆர். ராஜ்குமார், முதல்வர் புவனேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top