தாம்பரம் மெப்ஸ் சிக்னலில் எல்.இ.டி சிக்னல், அதிநவீன சிசிடிவி கேமராக்களை தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் இயக்கிவைத்தார்

தாம்பரம் காவல் ஆணைரகத்திற்குட்பட்ட தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை மெப்ஸ் சிக்னலில் எல்.இ.டி விளக்குகள் எரியும் விதமாக அமைக்கப்பட்ட நிலையில் அதனை காவல் ஆணையாளர் அமல்ராஜ் இயக்கிவைத்தர்,

மேலும் மெப்ஸ் தொழில் கூட்டமைப்பு வளாகத்தில் 16 லட்சம் செலவில் வாகனங்களின் நெம்பர் களை கண்டறிந்து பதிவு செய்யும் விதமான அதிநவீன சிசிடிவி கேமராக அதன் காட்சிகளை பதிவு செயும் சூப்பர் கணிணி ஆகியவற்றை இயக்கிவைத்த நிலையில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் விதிமுறையை மீறும் வாகனங்களின் உரிமையாள்ர்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாக அபராதம் வசூலிக்கும் கருவிகளை வழங்கி நடைமுறைப்படுத்தினார்,

இனி எந்த ஒரு வாகன ஓட்டிகள் உள்ளிட்ட யாரிடமும் பணம் பெறகூடாது ஆன்லைன் மூலமாக குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி அபராதம் வசூலிக்க வேண்டும் அப்படி ஆன்லைனில் செலுத்த முடியாத் நிலையில் வழக்குபதிவு செய்து மற்றொருமுறை அவர்களே அன்லைனில் செலுத்த அறிவுறுத்திட வேண்டும் என காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் ஐ.பி.எஸ். பேசினார்,

அப்போது தாம்பரம் காவல் ஆணையரக இணை ஆணையாள்ர் மூர்த்தி, தாம்பரம் காவல் துணை ஆணையாளர் அதிவீரபாண்டியன், மெப்ஸ் தொழில் வளாக மேம்பாடு அலுவலர் சண்முக சுந்திரம் ஐ.ஆர்.எஸ். உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

பேச்சு, பேட்டி: அமல்ராஜ் ஐ.பி.எஸ் ( ஆணையாளர், தாம்பரம் காவல் ஆணையரகம் )

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top