சேலையூர் இளங்காளி நாகாத்தம்மன் ஆலயத்தில் 26-ஆம் ஆண்டு ஆடி திருவிழா

மஹாலக்ஷ்மி நகரில் அமைந்துள்ள, அருள்மிகு ஓம் ஸ்ரீ இளங்காளி நாகாத்தம்மன் ஆலயத்தின் 26-ஆம் ஆண்டு ஆடி திருவிழா ஜூலை 15 அன்று தொடங்கியது.

15 ஜூலை அன்று காலை 5 மணி முதல் 6 மணிக்குள் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், காலை 6 மணிக்கு காப்பு கட்டுதலும், மாலை 6 மணிக்கு பதிவிளக்கு போட்டு அம்மனை அழைத்து அருள்வாக்கு கேட்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

16 ஜூலை அன்று காலை 6 மணி முதல் 8 மணிக்குள் அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெற்றது. 17 ஜூலை அன்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், காலை 11 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். இரவு 6 மணிக்கு கும்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top