Auction of vehicles in Otteri Police Station

ஓட்டேரி காவல் நிலையத்தில் கேட்பாரற்று
கிடக்கும் வாகனங்கள் பகிரங்க ஏலம்  

தாம்பரம் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட ஓட்டேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த மற்றும் கைவிடப்பட்ட 40 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒட்டேரி போலீஸ் நிலையத்தில் பகிரங்க ஏலம் மூலம் கழிவு வாகனங்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

இது குறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மேலும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள உள்ள ஏலதாரர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் ஜி.எஸ்.டி. பதிவு எண் ஆதாரங்களுடன் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் 24.6.2023 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் முன்பதிவு கட்டணம் ரூ.500 செலுத்தி தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்த ஏலதாரர்கள் ஏலக்குழுவினர் முன்னிலையில், 4.7.2023 அன்று காலை 10 மணிக்கு ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் பகிரங்க ஏலத்தில் கலந்துகொள்ளவும்.

பதிவு செய்த நபர்கள் மட்டுமே பகிரங்க ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனத்திற்கான ஏலத்தொகையை அன்றய தினமே 100 சதவீதம் செலுத்த வேண்டும். மேலும் அதற்கான ஜிஎஸ்டி கட்டணத்தை செலுத்திய பின்பு விற்பனை ஆணை வழங்கப்பட்டு ஏலம் எடுத்த வாகனங்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top