Multispeciality medical camp at Anakaputhur

அனகாபுத்தூரில் பன்னோக்கு மருத்துவ முகாம்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின்
மூலம் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் 24.6.2023 (சனிக்கிழலம) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனகாபுத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, ரேலா மருத்துவமனை, பாலாஜி மருத்துவமனை மற்றும் ஹரிஹரன் சார்ந்த சிறப்பு மருத்துவ குழுவினர் பங்கு பெற்று பொது மருத்துவம், இரத்த அழுத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, இ.சி.ஜி, முழு இரத்தப் பரிசோதனை, எக்கோ, பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நல மருத்துவம், இருதய நோய் சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், எழும்பியல் மருத்துவம், மனநல ஆலோசனை ஆகியவற்றுக்கு ஆலோசனைகளும் முகாமில் வழங்க உள்ளனர்.

முகாமிற்கு வரும் பொதுமக்களில் புதியதாக காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய உள்ள பயனாளிகள் குடும்ப அட்டை , ஆதார் அட்டை கொண்டு வர
வேண்டும்.

எனவே பொது மக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உரிய மருத்துவ சிகிச்சையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர் அழகுமீனா அவர்கள் கேட்டுக்கொண்டார்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top