சைவ உணவகத்தில் அசைவ உணவு கேட்ட  ஆயுத படை காவலர்கள்

தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியில் உள்ள அர்ச்சனா  பவன் உணவகத்தில் தாம்பரம் ஆயுதபடையை சேர்ந்த காவலர்கள்  இரண்டு பேர் மப்டியில் சாப்பிடுவதற்காக மது போதையில் சென்றதாக கூறப்படுகிறது.

சைவ உணவகத்தில் தங்களுக்கு சிக்கன் பிரைட் ரைஸ் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதற்க்கு அங்கிருந்த ஊழியர்கள் இது சைவ உணவகம் இங்கு அசைவம் கிடையாது என்று கூறியுள்ளனர். இருந்தாலும் தங்களுக்கு பிரைட் ரைஸ் வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆயுதபடை போலீசாருக்கும் கடை ஊழியர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதில் இருதரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர்.

சம்பவம் குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரிடமும் சேலையூர் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top