பூனையை பிடித்த விவகாரத்திற்கு வருத்தம் தெரிவித்த மருத்துவமனை

தாம்பரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரிந்த  பூனை ஒன்றை மருத்துவமனை ஊழியர்கள் தண்ணீர் பக்கட்டை வைத்து பிடித்து சாக்கு பையில் அடைத்து கொண்டு செல்லும்  செல்போன் காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

மேலும் அந்த பூனை கொல்லபட்டதாக விலங்கு ஆர்வலர்கள் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பேசிய  தலைமை அதிகாரி பத்மசினி கூறுகையில்,” மருத்துவமனைக்கு வரும் நோயகளிடம் இந்த பூனை தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்ததாக பலர் புகார்கள் வந்தன. இதனால்
பூனையை வளாகத்திற்குள் கண்ட ஊழியர்கள் உடனடியாக பிடித்து வேறு இடத்தில் கொண்டு விட வேண்டும் என்ற நோக்கத்துடன்  இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆதற்கு நாங்கள் மருத்துவமனை சார்பில் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.”

பூனை பிடிப்பதற்க்கு தகுந்த வழிமுறையை பயன்படுத்தாமல் செயல்பட்ட ஊழியர்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கபட்டுள்ளது மேலும் அவர்களிடம் இருந்து மன்னிப்பு கடிதம் வாங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மருத்துவமனை ஊழியர்களுக்கு வளாகத்திற்குள் வரும் விலங்குகளை எப்படி கையாள்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கபட்டதாகவும் அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top