Minister Geetha Jeevan reviews progress of girls hostel works in Tambaram

தாம்பரம் சானடோரியத்தில் 18 கோடி மதிப்பீட்டில் 424 பெண்கள் தங்கும் விதமாக கட்டப்படும்: அமைச்சர்

தாம்பரம் அடுத்த சானடோரியத்தில் 424 மகளிர் தங்கும் விதமான நவீன வசதிகளுடன் 18 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் மகளிர் விடுதி கட்டிட இறுதிகட்ட பணிகளை சமுக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், தாம்பரம் சட்டமனற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மேயர் வசந்த குமாரி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

அங்கு அமைக்கப்படும் தங்கும் அறைகள், நவீன சமையலறை, யோகா உள்ளிட்ட பல பயன்பாடு அரங்கு, இணையதளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியான கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை அமைச்சர் கீதாஜீவன் கேட்டறிந்தார்.

அதனையடுத்து மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சியாக கணிணி மற்றும் தையல் பயிற்சிகள் அளிக்கப்படும் நிலையில் அதற்கான வகுப்புகளை அமைச்சர் துவக்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன்:-

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் சமுக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை திறம்பட செயல்படுகிறது இந்த துறை மூலம் பணி செய்யும் பெண்கள், பயிற்சி வகுப்புகளுக்கு வருபவர்கள் படிப்பு, உள்ளிட்ட பல்வேறு காரணங்களுகாக நகரங்களில் தங்குவதற்கு வசதியாகவும் பாதுகாப்பு அளித்திடும் வகையிலும் மகளிர் தங்கும் விடுதிகள் புதியதாக கட்டப்படுகிறது, மேலும் பழைய விடுதிகளையும் மேம்படுத்தும் பணி செய்து வருகிறோம்,

அதன் தொடர்ச்சியாக தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையம் அருகாமையில் உள்ள இந்த விடுதி 18 கோடியில் நான்கு மாடி கட்டிடமாக 424 மகளிர்கள் தங்கும் விதமாக அமைக்கப்படுகிறது அதன் இறுதிகட்ட பணிகளை பார்வையிட்டுள்ளோம்.

முதலமைச்சர் அடுத்தமாதம் திறக்கவுள்ளார், மேலும் அதிநவீன வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கழிப்பிட வசதிகளுடன் அமைத்துள்ளோம்.

அதுபோல் காஞ்சிபுரம், ஐ.டி கம்பெனிகள் அதிகம் உள்ள ஓ.எம்.ஆர் சாலை மற்றும் தமிழகத்தின் பல்வேறு முக்கிய மாநகரங்களில் புதியதாக மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என்றும் இதுவரை 2 ஆண்டுகளில் கூடுதலாக 2 ஆயிரம் மகளிர்கள் தங்கும் விதமாக மகளிர் விடுதிகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top