MILLET FOOD FESTIVAL INAUGuRATED AT TAMBARAM RAILWAY GROUND

தாம்பரத்தில் சிறுதானிய உணவு திருவிழா கோலாகல துவக்கம்

தாம்பரம் மாநகராட்சி மற்றும் செங்கல்பட்டு உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் கிழக்கு தாம்பரத்தில் உள்ள ரயில்வே மைதானத்தில் சிறுதானிய உணவு திருவிழா உலக சாதனை நிகழ்வு மற்றும் சிறுதானிய தான்ய மஸ்காட் வெளியீடு நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் 11 கல்லூரிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு 600க்கும் மேற்பட்ட சிறுதானிய உணவு பொருட்களை செய்து காட்சிப்படுத்தி அரங்குகளில் வைத்திருந்தனர்.

திருவிழாவில் சிறுதானியங்கள் அடங்கிய மிகப்பெரிய சிறுதானிய கேக் செய்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

இந்த கேக் 551.05 கிலோ எடை, நீளம் 119 சதுர அடி, நீளம் 17 அடி, அகலம் 7½ அடி அகலம் கொண்டது.

18 மணி நேரத்தில் 60 மாணவர்கள், 60 ஆசிரியர்கள் சேர்ந்து செய்த கேக்கை ட்ரீம்ப் நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

அதே போல் 160 சிறுதானியங்கள் கொண்டு செய்யப்பட்ட உணவு வகைகளை 30 மாணவிகள், 120 மாணவர்கள், 20 ஆசிரியர்கள் காட்சிப்படுத்தினர்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மண்டல குழு தலைவர்கள் எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா ஆகியோர் கலந்து கொண்டு உலக சாதனை கேக் மற்றும் அரங்குகளை பார்வையிட்டனர்.

இந்த திருவிழா இன்று (11/3/2023) மாலை 5 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top