Review meeting of ongoing works in Tambaram Corporation

மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு
வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

தாம்பரம் மாநகராட்சியின் அலுவலக கூட்ட அரங்கில், 04.08.2023 கேபிள் டி.வி.நிர்வாக இயக்குநர்/தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர் ஆ ஜான் லூயிஸ், தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் ஆர் அழகுமீனா முன்னிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,மாநகராட்சியின் சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து
அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மழைநீர் வடிகால் அமைத்தல் பணி, சாலைப் பணிகள் மற்றும் கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் நடைபெற்று வரும்
திட்டப்பணிகள். தமிழ்நாடு நகர்ப்புர சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் மற்றும் நகர்புற சாலைகள்
மேம்பாட்டு திட்ட நிதியில் உட்புறச் சாலைகளை மேம்படுத்தும் பணிகள், மழை வெள்ள
காலங்களில் பொதுமக்களுக்குப் பாதிப்பின்றி மழைநீரானது சாலைகள் மற்றும் தெருக்களில்
தேங்காமல் வடிந்து செல்லும் வகையில் கால்வாய் தூர்வாரும் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு
மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் பதிவு செய்தல், பொதுவிநியோகக் கடை விற்பணை பணியாளர்கள். குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் முறையாக வழங்க வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்ய முகாமிற்கு வரவேண்டி நாள், நேரம் மற்றும் குடும்ப அட்டை எண்ணை அந்த விண்ணப்பத்தில் பதிவு செய்து வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விண்ணப்பங்கள் சென்றடையும் வகையில் உறுதி செய்திட வேண்டும்.

விண்ணப்பங்கள் வழங்கும் பணியில் எவ்வித தொய்விமின்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்திட வேண்டும். பொதுவிநியோகக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கக்கூடாது எனவும் வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்களை விரைவாக வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், தாம்பரம் காவல்துறை துணை ஆணையாளர் திரு.கு.அதிவீரபாண்டியன், மாநகராட்சி துணை ஆணையாளர் செயற்பொறியாளர், நகர்நல அலுவலர், உதவி செயற்பொறியாளர்கள், தாம்பரம்/ பல்லாவரம் வட்டாட்சியர்கள், மின்சாரவாரிய உதவி இயக்குநர், நெடுஞ்சாலை துறை உதவி இயக்குநர், பொதுப் பணித்துறை உதவி இயக்குநர், கூட்டுறவு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top