Stray cattle are reason for most accidents in Tambaram

விபத்துக்கு மாடுகள் தான் காரணம்!

பல்லாவரம் நேதாஜி பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள் (55) தனது கணவர் சின்னையா (65) உடன் திருமுடிவாக்கத்தில் நடைபெற்ற உறவினர் நிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் திருநீர்மலை சாலை வழியாக சென்ற போது மாட்டின் மீது மோதியதில் நாகம்மாள் வலது புறமாக கீழே விழுந்ததில் பின்னால் வந்த தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை துண்டான நிலையில் உயிரிழந்தார்.

கணவர் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சாலையில் மாடுகள் நின்று இருந்ததால் நாகம்மாள் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை உடனடியாக தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உயிரிழந்த நாகமாளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு சங்கத்தினர் பல்லாவரம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மாடுகளின் புகைபடங்களை கையில் ஏந்தி கோசங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மண்டல அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top