Tambaram Ward 70 residents request completion of SWDs

Tambaram: சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கம் 70வது வார்டு ஜெயபிரகாஷ் நாராயணன் நகர் ராஜம்மாள் காலணி பகுதியில் 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

புறநகர் பகுதிகளில் சில நாட்களாக மாலை வேலைகளில் பலத்த மழை பெய்து வருகிறது இதனால் அப்பகுதியில் மழை நீர் வெளியேற முடியாமல் கழிவு நீருடன் தேங்கி நிற்பதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வெளியேறி முடியாமல் பெரும் அவதிபட்டுள்ளனர்.

மழை காலங்களில் விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்து வருவதாகவும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள் தேங்கி இருக்கும் மழை நீரில் நடந்து செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது.

அப்பகுதியை சேர்ந்த முதியவர்கள் தேங்கி உள்ள மழை நீரில் நடக்க முயன்ற போது வழுக்கி விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து மழை காலங்காளில் இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் முறையான மழை நீர் வடிகால் கால்வாய்கள் அமைக்க வேண்டி தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ,துணை மேயர் காமராஜ் மற்றும் கவுன்சிலர் தேவேந்திரன் ஆகியோரிடம் பல முறை தெரிவித்தும் இது வரை எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேங்கி நிற்க்கும் மழை நீரில் கொசு உற்பத்தியால் பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பெரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பு தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top