Seetha Rama Thirukalyanam at Madambakkam

மாடம்பாக்கம் ஏ எல் எஸ் நகர்

மாடம்பாக்கம் ஏ எல் எஸ் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மெய்கை விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் 2 ஏப்ரல் 2023 அன்று நடைபெறும்.

30 மார்ச் 2023 அன்று ஸ்ரீ ராம நவமி முன்னிட்டு காலை 8 மணிக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் மாலை 6 மணிக்கு மஹா தீபாராதனை நடைபெறும்.

அதனை தொடர்ந்து 2 ஏப்ரல் 2023 அன்று காலை 8 மணி முதல் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.  மாலை 6.30 மணிக்கு திருமாட வீதி புறப்பட்டு நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு 9444223329, 9380543091 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

மாடம்பாக்கம் மாருதி நகர்

மாடம்பாக்கம் மாருதி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெய் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீ சீதா ராம திருக்கல்யாண வைபவம் 1 ஏப்ரல் அன்று நடைபெறும்.

இவ்விழா 30 மார்ச் அன்று காலை 8.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கும். மாலை 6 மணிக்கு விஜயேந்திர பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடைபெறும்.

31 மார்ச் காலை 8 மணிக்கு ஸஹஸ்ரநாம அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெறும். மாலை 6 மணிக்கு தீபா சதாசிவம், கீர்த்தனா, ஹரிணி  ஆகியோரின் கர்நாடக சங்கீத இசைநிகழ்ச்சி நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு 9443040560/9443325374  ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top