தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்

கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என செய்தி பரவி வந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்த சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னை புறநகர் பகுதிகளில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் சுற்று வட்டார பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தங்களின் உடைமைகளோடு சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக படிக்கட்டில் தொங்கிய படி ரயிலில் புறப்பட்டு சென்றனர்.

இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் போலீசார் வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுல் திடிரென சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டது.

முதலில் தமிழ்நாட்டில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியவர்கள் மார்ச் 8 ம் தேதி ஹோலி பண்டிக்கையாக சொந்த ஊருக்கு செல்ல இருப்பதாக பின்பு தெரிவித்தனர்.

ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் குவிந்துள்ளதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top