தாய் மண்ணே வணக்கம் !!

தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலசங்கங்களின் சார்பில் குடியரசு தினம் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் புகைப்பட தொகுப்பு. 

குடியரசு தினத்தை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சியில் அலுவலகத்தில் வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்வில் தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் வே .கருணாநிதி ,ஜோசப் அண்ணாதுரை மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், துணை ஆணையர் முருகேசன் மற்றும் அரசு அதிகாரிகள் ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து வது   மண்டலத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு மண்டல குழு தலைவர் இந்திரன் தலைமையில் மண்டல அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் ரமணி ஆதி மூலம், ஜோதி குமார், சசிகலா கார்த்திக், கொடி தாமோதரன், மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்காவது  மண்டலத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு மண்டல குழு தலைவர் காமராஜ் தலைமையில் மண்டல அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, டி.ஆர் கோபி, சுரேஷ் பெரியநாயகம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

சமூக நல சங்கம், மாடம்பாக்கம்
சேலையூர் ஐ.ஓ.பி. காலனி
சர்ச்சன்புடோ தற்காப்பு கலை அகாடமி
முத்துலட்சுமி நகர் பொது நலச்சங்கம்
சாம் அவென்யூ மற்றும் காயத்ரி நகர் சங்கம்
உமா நகர்
பாரதிதாசன் நகர்
புவனேஸ்வரி நகர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top