தேசிய தொழில்நுட்ப விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் சட்டப்பூர்வ அமைப்பான தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், தொழில்நுட்பப் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு 1999-ஆம் ஆண்டு முதல் தேசிய தொழில்நுட்ப விருதுகளை வழங்கிவருகிறது.

2023-ஆம் ஆண்டுக்கான இந்த விருதுகளை 5 பிரிவுகளில் பெறுவதற்கு விண்ணப்பங்களை தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் வரவேற்கிறது. இந்திய தொழில்துறை மற்றும் அவற்றின் தொழில்நுட்பத்திற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், இந்த பெருமைக்குரிய விருது அளிக்கப்படுகிறது.

இந்த விருதுகள்  தேசிய தொழில்நுட்பத் தினமான 2023-ஆம் ஆண்டு மே 11-ம் தேதி வழங்கப்படும். விருதுகளுக்கு விண்ணப்பிக்க  https://awards.gov.in/ என்ற தளத்தை அணுகவும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 2023 ஜனவரி 15-ம் தேதி மாலை 5 மணி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top