இந்திய பொருளாதாரம் பற்றிய டாக்டர் பாரிவேந்தர் அறக்கட்டளை சிறப்பு சொற்பொழிவு

எஸ் ஆர் எம் குழும நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் அறக்கட்டளை சார்பில் இந்திய பொருளாதாரம் மற்றும் 2023 ம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கை பற்றிய சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பின் தலைவர் வி நாகப்பன் பங்கேற்று சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சி. முத்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து வரவேற்றார்.

நிகழ்ச்சியில் நாகப்பன் பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 26.11.1947ல் நாட்டின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 24.59 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டாக இருந்தது, அது முதல்  கடந்த ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் வருவாயை கொண்டு அதன் மூலம் என்ன பணிகள் மேற்கொள்ளலாம் என்ற அறிக்கை வெளியிடப்படும். நாட்டின் வருவாயில் முக்கிய வருவாய் வரி விதிப்பின் மூலம்.

பற்றாக்குறை பட்ஜெட் என்பது இயல்பான பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, பயனுள்ள வருவாய் பற்றாக்குறை, வருவாயின் ஆரம்ப நிலை பற்றாக்குறை ஆகும். நாட்டின் வருவாய் இழப்புகளை எடுத்துக்கொண்டால் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் உதவிகள் முறையாக திருப்பி செலுத்தப்படாமல் வாரா கடனாக இருப்பது, நிதி பற்றாக்குறை க்கு வாங்கப்படும் கடனுக்கு செலுத்தப்படும் வட்டியின் மூலம் இழப்பு உள்ளிட்டவை ஆகும், வருவாய் இழப்பு என்பது அபாயகரமான நிலைக்கு வழி வகுக்கும்.

நமக்கு தேவையான நிதி அளவு 45 லட்சம் கோடி ஆகும், இதில் வரி வருவாய்  மூலம் கிடைப்பது 33 லட்சம் கோடி மட்டுமே,இதனால் தான் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது.

தற்போது பணபரிவர்தனை ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) மூலம் 70% உள்ளது. அதாவது அதன் அளவு 125 லட்சம் கோடி ஆகும். இதன் மூலம் பண பரிமாற்றம் எளிமை ஆக்கப்பட்டுள்ளது, என்று கூறினார்

இந்த நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் குழும வேந்தரின் ஆலோசகர் ராகவன் மற்றும் அறிவியல் மற்றும் கலையியல் புலம் பள்ளி டீன் பேராசிரியர் துரைசாமி, பல்வேறு துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top