Degrees presented to 8513 students during SRMIST Graduation Day

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக சிறப்பு பட்டமளிப்பு விழா 8513 மாணவர்களுக்கு பட்டம்

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் எஸ்ஆர்எம் வேந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை வைத்தியம், யூனாணி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தை பிரபலப்படுத்தும் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர்,பத்மஸ்ரீ விருது பெற்ற வைத்தியா ராஜேஷ் கோட்சாவிற்கும், நிலவில் சந்திராயன்-3 என்ற செயற்கை கோளை நிலை நிறுத்தியதில் சாதனை படைத்த அந்த திட்டத்தின் இயக்குனர் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி முனைவர் பி. வீரமுத்துவேல் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார். இதில் உலக மருத்துவ கல்வி கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் ரிக்கார்டோ லியோன் போற்கொஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார்.

SRMIST எனப்படும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் (முன்னாள் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் ) சிறப்பு பட்டமளிப்பு விழா சமீபத்தில் காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் உயர்கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள டி.பி.கணேசன் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் இணைவேந்தர் முனைவர் பா.சத்தியநாராயணன் வரவேற்று பேசுகையில் :

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள பேராசிரியர் ரிக்கார்டோ லியோன் போற்கொஸ் உலக மருத்துவ கல்வி கூட்டமைப்பின் தலைவராக உள்ளார்.இந்திய தேசிய மருத்துவ ஆணையகத்திற்கு உலக மருத்துவ கூட்டமைப்பு அங்கீகாரம் வழங்கி உள்ளது, இதன் மூலம் இந்திய மருத்துவர்கள் 10 ஆண்டுகளுக்கு உலக முழுவதும் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பட்டம் பெற்றுள்ள நீங்கள் சமுதாய வளர்ச்சிக்கு உங்களின் பங்களிப்பை வழங்கவேண்டும் என்றார்.

விழாவில் கௌரவ டாக்டர் பட்டம் பெரும் விண்வெளி விஞ்ஞானி வீரமுத்துவேல் உலக அளவில் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள சந்திராயன் 3 திட்ட செயற்கை கோளை நிலவில் நிலை நிறுத்தி சாதனை படைத்துள்ளார். அதேபோன்று கௌரவ டாக்டர் பட்டம் பெரும் ஆயுஷ் அமைச்சக செயலர் பத்மஸ்ரீ வைத்தியா ராஜேஷ் கோட்சா நாட்டில் இந்திய மருத்துவ முறையினை பிரபலப்படுத்தும் திட்டத்தினை சிறப்பாக செய்து வருவது பாராட்டுக்குறியது என்றார்.

விழாவில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் சி.செந்தமிழ்செல்வன் நிறுவனத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார்.

பட்டமளிப்பு விழாவிற்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் வேந்தரும் பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் தலைமை வகித்து, பாரத் ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்தியா ராஜேஷ் கோட்சா மற்றும் சந்திராயன்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோர்க்கு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கி அவர்களை கௌரவித்தார்.மேலும் மாணவ, மாணவியர் 8513 பேருக்கு பட்டங்களையும் பல்கலை தேர்வில் ரேங்க் பெற்ற 241 பேருக்கு பதக்கங்களையும் வழங்கி வாழ்த்தினார்.

விழாவில் உலக மருத்துவ கல்வி கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் ரிக்கார்டோ லியோன் போற்கொஸ்
சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில் :இந்த பட்டமளிப்பு விழாவில் மருத்துவ பட்டம் பெற்ற பட்டதாரிகள் அடுத்து நீங்கள் மேற்கொள்ளும் பணி சமுதாயத்தின் நலனுக்கானது. மருத்துவ பணி மேற்கொக்கொள்ளும் நீங்கள் மருத்துவ கல்வியில் பெற்ற அறிவிணை மேலும் வளர்த்துக்கொள்ள உதவும் என்றார்.

விழாவில் கௌரவ டாக்டர் பட்டம் பாரத் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் பத்மஸ்ரீ வைத்தியா ராஜேஷ் கோட்சா ஏற்புரை வழங்குகையில்:நமது பாரதத்தின் வரலாற்றில் இந்திய மருத்துவ முறை சிறப்பிடம் பெற்றுள்ளது.

எஸ்ஆர்எம் பல்கலை கல்வி,ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதுடன்,மருத்துவம் மற்றும் ஆயுஷ் மருத்துவ கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருவது பாராட்டுக்குறியது. மனித ஆரோக்கியத்தில் மருத்துவதிற்கு முக்கிய பங்கு உள்ளது. ஆயூர்வேதா மருத்துவத்தில் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டுவருவதற்கு ஐ ஐ டி ஜோத்பூர் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. அதேபோன்று சென்னையில் சித்தா ஆராய்ச்சியும் நடக்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானியும், சந்திராயன் 3 திட்ட இயக்குனருமான பி. வீரமுத்துவேல் ஏற்புரை வழங்குகையில்:உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது, சந்திராயன் 3 விண்கலத்தை சந்திரனில் நிலை நிறுத்தி இந்திய விண்வெளி துறை சாதனை படைத்துள்ளது.சந்திராயன் 3 திட்டம் உருவாக்க கடும் முயற்சி எடுக்கப்பட்டது, அதன் வெற்றிக்கு எங்களது குழுவின் கடும் முயற்சி தான் ஆகும். நாம் வெற்றிபெற கடும் முயற்சி தேவை தோல்வி பற்றி துவண்டு விடாமல் முயற்சி தொடரவேண்டும் அதன் மூலமாக வெற்றி காண முடியும் என்றார்.

எஸ்ஆர்எம் ராமாபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி வளாகங்களின் தலைவர் டாக்டர் ஆர். சிவகுமார்,எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி தாளாளர் ஹரிணி ரவி, இணை துணைவேந்தர் மருத்துவம் டாக்டர் எ. ரவிக்குமார், பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top