International conference held at Sri Balaji hospital, Chrompet

குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீ பாலாஜி  மருத்துவமனையில் வாய்ஸ்கான் 2023 போனா சர்ஜரி ( ஒலி அறுவை சிகிச்சை) என்ற தலைப்பில் இரண்டாம் தேசிய அளவிலான கருத்தரங்கம் மற்றும் செய்முறை பயிற்சியில் இந்திய முழுவதிலுருந்து 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ பாலாஜி மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை சிகிச்சையியல் துறைத்தலைவர் டாக்டர் எம்.கே. ராஜசேகர் கூறுகையில் வாய்ஸ்கான் 2023நிகழ்வு போனோ சர்ஜரி (ஒலி அறுவை சிகிச்சை) என்ற பிரிவில் மிக சமீபத்திய செயல்முறை உத்திகளை நடைமுறையில் கடைபிடிப்பதற்கு இளம் மருததுவர்களை வாய்ஸ் கான் 2023 கருத்தரங்கு உத்வேகத்தையும் திறனையும் வழங்கும் உடற்கூறு அமைப்புகளை தொந்தரவு செய்யாமல் குரல், ஒலியை மீண்டும் குரல்வளையிலிருந்து கொண்டு வருவதே போனா சர்ஜரி யின் நோக்கமாகும் குரல் நாண் வாதம்,சல்கஸ் வோகாலிஸ் , வலிப்பு சார்ந்த பேச்சிழப்பு ,குரல் எழுப்பாமை, பருவமடைதலின் போது ஏற்படும் குரல் மாற்றம் போன்ற பல்வேறு குரலொலி சீர்கேடுகளை சரி செய்வதற்காக இந்த அறுவை சிகிச்சையை செய்யலாம்.

முன்னதாக டாக்டர் ஜான்சன், குணசேகரன், சசிகுமார்,வீரபாகு , ஆகியோர் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top